விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை!

புதன் நவம்பர் 13, 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின்போது, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைகாவல் துறை  நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில்  காவல் துறை  தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வல்வெட்டித்துறைகாவல் துறை நிலையத்தில் 54 பேர்  தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில்,  43 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

அதில், 25 விண்ணப்பங்கள் காவல் துறை நிலைய நிர்வாகக் கட்டமைப்பின் கவனயீனம் காரணமாக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த  விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.