விபத்தில் மூவர் உயிரிழப்பு

புதன் செப்டம்பர் 16, 2020

இரத்தினபுரி - அவிசாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

லொறி மற்றும் ஓட்டோ மோதியதில் இன்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டோவில் பயணித்த 48, 53, 57 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.