விடை பெற்று விடு!

செவ்வாய் டிசம்பர் 31, 2019

வருடமே
ஈழத்தமிழினம்
ஒவ்வொரு
ஆண்டையும்
ஏமாற்றத்தோடு
வழியனுப்பி
வைப்பதும்
ஏக்கத்தோடு
புதிய ஆண்டை
வரவேற்பதும்
வாடிக்கையாகி
விட்டது அது
உனக்கு
வேடிக்கையாகி
விட்டது
நம்பினோம் உன்
சுழற்சியில் நாமும்
சுதந்திரமாய்
சுழர்வோம் என்று
ஏமாற்றமே
மிஞ்சியது
எங்களை
அழித்தபோர்
குற்றவாளிகளிகள்
என்று
அகிலமும்
சொல்லிவிட்டது
அவர்கள்தான்
இன்று
அரியணையில்
என்ன செய்வோம்
நீயும் உன் பங்கிற்கு
எங்களை
பரிதாபமாக
ஓரக்கண்ணால்
பார்த்து விட்டு
விடை பெற்று விடு


றொப்