வித்தியாசமான முறையில் காதலை சொன்னதால்! காதலர்களுக்கு நேர்ந்த சோகம்???

சனி சனவரி 02, 2021

ஒருவர் முதன் முதலில் தன் காதலை வெளிப்படுத்தும் போது, அந்த நாளை யாரும் மறந்துவிட முடியாது, அந்த நாளை தான் காதலர்கள் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவார்கள், ஏனென்றால் இதைவிட அவர்களுக்கு சிறப்பான நாள் என்று இருக்க முடியாது.

 இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஆஸ்திரியா நாட்டில் நடந்துள்ளது, கரிந்தியாவில் உள்ள பால்கார்ட் மலையில், 26 வயது பெண் ஒருவர் உயரமான பாறையின் மேல் நின்று தன் ஆண் நண்பரிடம் காதலை வெளிப்படுத்தும்போது எதிர்பாராவிதமாக,650 மீட்டர் பள்ளத்தில் கீழே தவறி விழுந்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன் காதலி கீழே விழுந்ததில் பதற்றமடைந்த காதலன், சற்றும் எதிர்பாராதவிதமாக தன் காதலியை காப்பாற்ற கீழே குதித்தார், ஆனால் காப்பாற்ற முடியாமல் கிட்டத்தட்ட 50 அடி உயரத்தில் மாற்றிக் கொண்டார்.

சுமார் 650 மீட்டர் பள்ளத்தில் விழுந்த அந்த பெண் பனிப்பாறையின் மீது விழுந்தார். எதர்ச்சியாக இதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்க்க நேரிட்டதால் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக அந்தப் பெண் மீட்கப்பட்டார்.

மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி கூறுகையில், இவர்கள் இருவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், காதலன் 15 மீட்டர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டார், அந்தப் பெண்ணோ 200 மீட்டர் தொலைவில் உள்ள பனி பாறையில் விழுந்தார் எனவும் தெரிவித்தார் , ஒருவேளை பனி இல்லாதிருந்தால், நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு துயர சம்பவமாக நிகழ்ந்து இருக்கும் என்று கூறினார்.

இறுதியாக காதலனையும் உலங்குவானூர்தி மூலமாக மீட்டனர், அவருக்கு கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காதலுக்கு கண்ணில்லை என்பது போல கவனக்குறைவால் நேர்ந்த காதல் சம்பவம் அவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை நிகழ்த்தியுள்ளது.