விடுதலைக்காகக் காலம் கையளித்த கரிகாலன்!

செவ்வாய் நவம்பர் 26, 2019

நிறைய மானம்,
நிறைய வீரம்,
நிறையத் துணிவு,
பணிவு, தெளிவு, கருணை,
அன்பு, அறிவு, ஆற்றல்,
அடக்கம், பண்பு, மாண்பு,
ஈகம், கனவு, ஒழுக்கம்
இவை எல்லாம் வைத்து
ஒருமனிதனைப் படைத்தால் – அது பிரபாகரன்!

இவன் அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின்
விடுதலைக்காகக் காலம் கையளித்த கரிகாலன்!
சுதந்திரமற்ற மனித வாழ்க்கை அர்த்தமற்றது என்று சொன்னவன்!
உயிரைவிட உரிமை மேலானது என்று உணர்த்தியவன்!
தமிழரென்று ஒரு இனமுண்டு! தனியே அவருக்கு ஒரு குணமுண்டு!
மானமும், வீரமும் உயிரென்று உலகத்திற்குக் காட்டியவன்!

தமிழின வீரர்களில் தனித்துவமானவன்!
தாழ்ந்த தமிழின மீட்சிக்குத் தத்துவமானவன்!
இவன் எங்கள் அண்ணன்;
இவன் எங்கள் தாய்;
இவன் எங்கள் முகம்;
இவன் எங்கள் முகவரி;
இவனே எங்கள் பெருமைமிகு அடையாளம்!

சொல்லுக்கு முன்செயல் என்று சொன்னவன்!
தமிழர்களின் மானம்காத்த தென்னவன்!
ஆறுபடை கொண்டு அன்னைநிலம் காத்த மன்னவன்!
இவன் எங்கள் தலைவன்!

எங்களுக்கு உயிர்ப்பால்
ஊட்டிய தாயை நேசிப்பது போல,
அறிவுப்பால் ஊட்டிய
என் தாய்த்தமிழை நேசிப்பது போல
எங்கள் உயிர்த்தலைவன்
இவனை நாங்கள் நேசிக்கின்றோம்!

அவன் அன்புப் பிள்ளைகள்
அவன் பிறந்த நாளில்
பேரன்புகொண்டு வாழ்த்துகிறோம்!

வாழ்க எம் இறையே!
வாழ்க நீ நிறைய!