விடுதலைப்புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியின் பொறுப்பாளரும் சிரேஷ்ட ஊடகவிலாளரும் பரதன் மாரடைப்பால் காலமானார்

வெள்ளி மார்ச் 19, 2021

விடுதலைப்புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி பொறுப்பாளராக இருந்த பரதன் ( இராசநாயகம் பரதன் ) இன்று மாரடைப்பால் காலமானார்

இவர் எழுததாளர் இராசநாயகம் மாஸ்ரரின் மூத்த மகனும் சிரேஷ்ட ஊடகவிலாளர் பாரதி இராசநாயகத்தின் சகோதரரும் ஆவார். 

நிதர்சனம் தொலைக்காட்சியின் வளர்ச்சியில் பரதனுக்கு பெரும் பங்கு உண்டு. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வசித்து வருகிறார். 

60 வயதான பரதன் இன்று லண்டனில்  நடைபயிற்சிக்கு சென்ற போது மாரடைப்பால் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரின் பிரிவால் துயரமடைந்திருக்கும் அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையின் ஆரம்பத்திற்கு அடித்தளமிட்ட வரும்  நிதர்சனம் என்று ஓர் நேரலை தொலைக்காட்சியை முதன்முதலாக யாழ் மாவட்டத்தில் உருவாக்குவதற்கு ஆணிவேராக இருந்த வரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களை தமிழ் மக்களின் அவலங்களை வரலாற்று ரீதியாக இன்று வரை நாம் பார்க்கும் வகையில் அன்றே அந்தப் பணியை ஆரம்பித்து வரும் சவால்கள் நிறைந்த காலங்களில் மிக கடுமையாக பணியாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கு

லண்டனில் மூன்றாம் கண் என்ற நிறுவனத்தை நடாத்தி பல பதிவுகளை செய்தவரும் இறுதிவரை தமிழர்களையும் தமிழீழ மண்ணையும் நேசித்த பரதன் அண்ணா எம்மை விட்டு பிரிந்து மா வீரர்களுடன் இணைந்து விட்டார்.