விடுதலையை வலியுறுத்தி மலேசிய தமிழர்கள் போராட்டம்.

திங்கள் சனவரி 20, 2020

கொட்டும் மழையிலும், சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலைக்காக மலேசிய தமிழர்கள் போராட்டம். இப்போது 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதி கிடைக்காததாலும், ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குகள் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்படுவதாலும்,குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.