விவசாயிகள் போராட்டம்! பஞ்சாப் நடிகர் உள்ளிட்ட 40 பேருக்கு என்.ஐ.ஏ சம்மன்-

ஞாயிறு சனவரி 17, 2021

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் தலைவர், பஞ்சாபி நடிகர் உள்பட 40 பேருக்கு என்.ஐ.ஏ சம்மன்

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர், பஞ்சாபி நடிகர் தீப் சித்து உள்பட 40 பேருக்கு தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர். 

டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ.தலைமயகத்திற்கு இன்று காலை பத்தரை மணியளவில் விசாரணைக்கு வருமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் பேரணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் குடியரசு தினத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ் என்ற அமைப்பு குறித்த விசாரணையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்