வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

செவ்வாய் நவம்பர் 24, 2020

மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத் தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திரு கோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 370 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 9.3N இற்கும் கிழக்கு நெடுங் கோடுகள் 84.5E இற்கும் இடையில் நிலை கொண் டுள்ளதாக வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங் கையின் வடக்கு, கிழக்கு கரைகளை அண் மித்ததாக இந்தியாவின் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை யோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளம் முதல் மன்னார் ,காங்கேசன்துறை , திரு கோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக பொத்துவில் கடற் பரப்பு வரையிலான பிரதேசங்களில் மீன்பிடித்தல் மற்றும் கடற்படை நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக் குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு விடுத்துள்ளது.

காற்றின் வேகம் 80-100 கி.மீ வேகத்தில் இருக்கும் என்ப தால் கடல் பகுதி சில நேரங்களில் கடுமையான கடல் அலைகள் உருவாகலாம் என தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திரு கோணமலை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வட மாகாணத்தில் பல இடங்களில் 100 முதல் 150 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிர தேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக் கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப் புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.