வல்வெட்டித்துறையில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வணக்கம்
வெள்ளி நவம்பர் 27, 2020

வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜலிங்கம் தமிழ்த் தேசிய மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.
தமது அலுவலகம் மற்றும் வீடு ஆகியன இணைந்ததாக உள்ள வளாகத்தில் இன்று (27) மாலை இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, வடமராட்சியின் வீதிகள் எங்கும் சிங்களப் படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.