வங்காலை கடற்கரையில் மாபெரும் சிரமதானம் பணி!!

திங்கள் செப்டம்பர் 21, 2020

சர்வதேச கரையோர தூய்மையாக்கல் தினத்தை முன்னிட்டு, வங்காலை கடற்கரையில்  இன்று திங்கட்கிழமை (21) காலை 7.30 மணியளவில் மாபெரும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களமும் இணைந்து, இச்சிரமதானத்தை முன்னெடுத்தன.

இதன்போது   கடற்படை,பொலிஸார்,நானாட்டன் பிரதேச சபை, வங்காலை மீனவர் சங்கம்,சமூர்த்தி பயனாளிகள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.