வன்முறை எதற்கும் தீர்வல்ல! விவசாய சட்டங்களை இரத்து செய்யுங்கள்! ராகுல் காந்தி-

செவ்வாய் சனவரி 26, 2021

மத்திய அரசு  கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பல நாட்களாக நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர்.

தொடர்ந்து இன்று டெல்லி நகரில் உழவு இயந்திர பேரணியும் நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்ற விவசாயிகளில் சிலர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

விவசாயிகளின் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றபோது, வன்முறையும் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் வன்முறை எதற்கும் தீர்வல்ல எனத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. 

வன்முறை எதற்கும் தீர்வல்ல, இதனால் யார் ஒருவர் காயம்பட்டாலும் அதனால் ஒட்டுமொத்த நாடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

நாட்டின் நலன் கருதி  விவசாய விரோத வேளாண் சட்டங்களை இரத்து செய்யுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.