"வரலாற்றறிவூடு விடுதலையை விரைவாக்குவோம்" தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி - 2020

ஞாயிறு நவம்பர் 08, 2020

 *பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல்*, எதிர்வரும் *21 ,22 ஆம் நாட்களில்* காலை *9.00 மணி முதல்* மாலை *6.00 மணி வரை* *இணையவழியில் நடைபெறவுள்ளது*. ஏற்கனவே, தமிழ்ச்சோலை மாணவர்கள் மட்டத்தில் நடைபெற்ற இத்திறனறிதல் மாவீரர் நாளையையொட்டி பொதுமக்களுக்காக  விரிவாக்கப்படுவதாக  தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் *அவரவர் வீடுகளில் இருந்தபடியே* செய்யக்கூடிய இத்திறனறிதலின் முடிவில் *சான்றிதழ்கள் மின்னஞ்சலுக்கு உடனடியாகக் கிடைக்கப்பெறும்* வகையிலான புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் தமிழ்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஊடகங்களில் வெளியிடப்படும்.

*கறுப்பு யூலை, தியாக தீபம் திலீபன்,மற்றும் மாவீரர் நாள் ஆகிய நினைவு நாட்களையொட்டி இத்திறனறிதல் பொதுமக்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறவிருக்கிறது*. மாவீரர் நாளையொட்டி நடத்தப்படும் இத்திறனறிதல் *தமிழீழப் போராட்டம் தொடர்பான பரந்துபட்ட கேள்விகளை* உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தமிழ்ச்சோலை தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

*‘’வரலாற்றைப் படி ! வரலாற்றைப் படை’’* எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய  இளையோரிடத்தே எமது இனம் சார்ந்த சரியான வரலாற்றுப் புரிதல் இன்றியமையாதது. *புதிய தொழில்நுட்பத்தூடு வரலாற்றை இளையோரிடத்தே கொண்டு செல்வதே  இத்திறனறிதலின் நோக்கம்* எனவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவுத்துள்ளது.