வரலட்சுமி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்!

திங்கள் மார்ச் 11, 2019

சர்கார், சண்டகோழி 2 படத்தை தொடர்ந்து, பல படங்களில்  நடித்து வரும் வரலட்சுமி ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு சர்கார், சண்டகோழி 2 ஆகிய படங்களில் நடித்த வரலட்சுமியின் கைவசம் வெல்வட் நகரம், கன்னி ராசி, நீயா 2, காட்டேரி, டேனி, கன்னித்தீவு உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இந்நிலையில் ராஜ பார்வை படத்திலும் நடித்து வருகிறார். ஜே.கே இயக்கும் இந்தப் படத்தில் கத்தியை லாவகமாகச் சுற்றும் காட்சி இடம்பெறுகிறது.

அதற்காக நிஜக் கத்தியை அவர் பிடிப்பதை காணாளி பதிவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ராஜ பார்வை படத்திற்காக பயிற்சி செய்கிறேன்.

 

பயிற்சியே முழுமையைத் தரும் அப்போது மிகுந்த மகிழ்ச்சியைப் பெறலாம். இதை படம் பிடித்த சிகை அலங்கார கலைஞர் ஸ்ரீதருக்கு நன்றி” என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார்.