வறட்சியான காலநிலை 08 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 05 இலட்சத்து 50,000 பேர் பாதிப்பு!

வெள்ளி ஜூலை 12, 2019

வறட்சியான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 05 இலட்சத்து 50,000 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.வடக்கு,கிழக்கு மாகாணங்கள் மற்றும் புத்தளம் மற்றும் குருணாகலை மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

அந்த மக்களின் குடிநீர் பிரச்சினைக்காக 50 மில்லியன் ரூபா நிதி இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் 20,000 பவுசர் மற்றும் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் 117 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும் என்று பிரதீப் கொடிப்பிலி கூறினார்.