வட-கிழக்கில் மாத்திரம் நினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு

செவ்வாய் நவம்பர் 24, 2020

1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோத்தா அரசு தடை போடுகிறது. இப்படி ஒவ்வோர் மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான்  “ஒரே நாடு ஒரே சட்டம்” என்றும் கோமாளித்தனமாக சொல்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.