வடக்கே இராணுவ ஆட்சி, ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுக்கும் இரு படையினர்!

ஞாயிறு ஜூலை 12, 2020

வடக்கில் திட்டமிட்ட இராணுவ ஆட்சியை ஏற்படுத்த கோட்டபாய ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய முதற்கட்டமாக அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பிரதேசத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் நடைபெற்றதால் குறித்த படையினர் உடனடியாக களத்தில் இறங்குவர். 

மேலும், ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்.

இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு படையினர், கிராம சேவகர் அலுவலகத்துடன் இணைந்து கடமையாற்றுவார்கள்.

தமிழ்த் தேசியத்தை முற்றுமுழுதாக இல்லாமல் ஆக்கும் நடவடிக்கையாக இத்திட்டம் கோட்டபாய அரசால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.