வடமராட்சி கிழக்கில் மூன்று சிறுவர்களைக் காணவில்லை!

சனி சனவரி 18, 2020

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களைக் காணவில்லை என அவர்களின் பெற்றோர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

17 வயதான சந்தியோ தனுசன், மற்றும் 10 வயதான கலியுகமூர்த்தி மதுசன், புஸ்பகுமார் செல்வகுமார் ஆகியோரே இன்று இன்று சனிக்கிழமை மாலை தொடக்கம் காணாமற் போயுள்ளனர் என பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

குறித்த சிறுவர்களைக் காணவில்லை என அறிந்த ஊரவர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையிலேயே பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பெற்றோரின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.