வடபகுதி சிறுவர்களின் கழுத்தில் இருந்து சயனைட் குப்பிகளை அகற்ற முடிந்தமை தமக்கு கிடைத்த பாக்கியமாம்

சனி ஜூலை 11, 2020

வடபகுதி பிள்ளைகளின் கழுத்தில் தொங்கிய சைனற் குப்பிகளை அகற்ற முடிந்தமை தமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினாலேயே இன்று நாட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர் எனவும் மகிந்த கூறினார். 

அரசாங்கம், துப்பாக்கியை கையில் எடுத்த பயங்கரவாதிகளுடன் போரிட்டதே தவிர தமிழ் மக்களுடன் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

கேகாலை கலிகமுவயில் இடம்பெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். 

இனப்படுகொலை யுத்தத்தை முன்னெடுத்த மகிந்த ராஜபக்ச வன்னியில் கொத்துக்கொத்தாக சிறுவர்களை படுகொலை செய்திருந்தார். தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிட்டுக்களை சிங்கள தேசத்து படைகள் துடிக்கத் துடிக்க சுட்டுக்கொன்றன. 

m

பாலுக்கு அழுத பாலகர்கள் தண்ணீர் கூட இன்றி மடிந்த நிலை வன்னியில் ஏற்பட்டது. கஞ்சிக்கு வரிசையில் நின்றவர்கள் மீது மகிந்த ஏவிய குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அந்த இடத்திலேயே மாண்டனர். 

m

செஞ்சோலை சிறுவர் காப்பகம் மீது சிங்கள விமானப்படையினர் வீசிய குண்டுகளால் கொத்துக் கொத்தாக மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆதரவற்ற சிறுவர்கள் அமைதியாக கல்வி கற்ற அந்த இடத்தின் மீது குண்டுகளை வீசி அவர்களைக் கொன்று குவித்து, உலகமே கண்ணீர் விட்ட சோகத்தை நிகழ்த்தியது சிங்களப் படை. 

m

நிலமை இவ்வாறிருக்க, வடபகுதி சிறுவர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்ற முடிந்தமை தமக்கு கிடைத்த பாக்கியம் எனக் கூறுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு எந்த அருகதையும் இல்லை என தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.