வட்டிக்கு பணம் கொடுத்த ரஜினி!

வெள்ளி சனவரி 31, 2020

கடந்த, 2002 முதல், 2005ம் ஆண்டு வரை, வட்டிக்கு பணம் கொடுத்தேன்'என,வருமான வரித்துறைக்கு, நடிகர் ரஜினி விளக்கம் அளித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த, 2002 முதல், 2005ம் ஆண்டு வரை, முறையாக வருமான வரி செலுத்தவில்லை என, நடிகர் ரஜினி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வருமான வரித் துறை தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, சமீபத்தில், திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில்,வருமான வரித்துறைக்கு, ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் தொடர்பான தகவல்கள்,தற்போது வெளியாகி உள்ளன.

'கடந்த, 2002-03ம் நிதியாண்டில்,2.63 கோடி ரூபாய் கடன் வழங்கினேன் அதன் வாயிலாக, 1.45 லட்சம் ரூபாய் வட்டி கிடைத்தது.இதற்கு முறையாக வரி செலுத்தி உள்ளேன்.மேலும்,2004-05ம் ஆண்டில்,1.71 கோடி ரூபாய் கடன் வழங்கினேன்.

கொடுத்த பணம் வசூலாகாமல், 33.93 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.'மேலும், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே கடன் வழங்கினேன்.வட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகவோ வியாபாரமாகவோ செய்யவில்லை' எனவும், ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை ஏற்றுதான், ரஜினி மீதான வழக்கை, வருமான வரித்துறை திரும்ப பெற்றுள்ளது.