வட்டக்கச்சியில் கிணற்றில் பாய்ந்த சம்பவம்: ஏனைய இரு பிள்ளைகளின் சடலங்களும் மீட்பு

வியாழன் மார்ச் 04, 2021

 கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதி யில் வசிக்கும் தாயார் ஒருவர் குடும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலைக்கு முயன்றிருந்தார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாயார் மட்டும் உயிருடன் நேற்று மீட்கப்பட்டிருந்தார்.

இரணைமடுக் குளத்தின் வலது கரை வாய்க்கால் ஓரம் உள்ள ஒற்றைக்கை பிள்ளையார் ஆலயம் அருகில் இருந்த கிணற்றுக்குள் தனது பிள்ளைகளைப் போட்டதாயார் தானும் கிணற்றில் குதித்துள்ளார்.

தாயார் கிணற்றில் குதிப்பதை அவதானித்த சிலர் உடன் கிணற்றில் பாய்ந்து காப்பாற்ற முயன்றதில் தாயார் உயிருடனும் ஆண் பிள்ளை(2 வயது ) சடலமாகவும் நேற்று மீட்கப்பட்டனர்.

எனினும் ஏனைய இரு பெண் பிள்ளைகளைத் தேடும் பணி தொடர்ந்த நிலையில் அவர்களது சடலங்களும் பின்னர் மீட்கப்பட்டுள்ளன.

கிருத்திகா(வயது 08), அட்சயா(வயது 05), ரெனேஜன்(வயது 2) ஆகியோரே தாயாரின் விபரீத முடிவால் உயிரிழந்த பிள்ளைகளாவர். மூன்று பிள்ளைகளின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.