வவுனியா ஓமந்தைக் காட்டில் படமாக்கப்பட்ட அரியவகை இனம்!!

திங்கள் நவம்பர் 02, 2020

வவுனியா ஓமந்தைக் காட்டு பகுதியில் விநோதமான அரணை ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கே மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ்(Dasia halianus) எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவம் மிக்க அரணை வன்னிக் காடுகளில் காணபட்டபோதிலும் மிக அரிய ஒரு இனமாகவே இருந்து வந்துள்ளது.

பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த அரணை ஒரு சில தினங்களுக்கு முன் வவுனியா ஓமந்தைக் காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

111

இதேவேளை நாட்டின் தனித்துவமான ஒரு அரியவகை உயிரினமாக இது இருப்பதனால் 70ஆம் ஆண்டுகளில் வந்த இரண்டு ரூபா நாணயத்தாளில் இதன் படம் காணப்படுவதை அவதானிக்கலாம்.