வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!

புதன் மே 22, 2019

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியை நேற்றைய தினம்  மாலை நிலத்தை பண்படுத்தி தீ வைத்த போது கைக்குண்டொன்று இருந்து வெடித்துள்ளது. 

அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட  உரிமையாளர் இன்று வவுனியா காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

காவல் துறை  மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் இன்று சென்ற  காவல் துறை அப்பகுதியில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளார். 

அப்பகுதியில்  தேடுதல் மேற்கொண்டபோது குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.