யாழ். காரைநகரில், தமிழரின் வரலாற்றுப் பொக்கிசங்களை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு கையளிக்கும் முயற்சி!

தமிழர்கள் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியங்களை உடைய இனம். காலத்தால் முற்பட்ட, கற்காலப் பண்பாடு எனக் கூறப்படும் காலத்தில்கூட சிறப்பாக வாழ்ந்த இனம். உலகத்திற்கே பல இலக்கியங்களையும் வாழ்க்கை நடைமுறைகளையும் கையளித்துள்ள இனம்.
முன்னர் உலகம் பூராக தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்கு இன்றும் பல்வேறு நாடுகளில் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அகழ்வு ஆராட்சிகளும் ஆலயங்களும் இதற்கு சான்றாக உள்ளன.
தமிழர்தம் கலைகளையும் கலைப் பொருட்களையும் அழியவிடாது பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு வழங்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் பலர் இன்றும் செயற்பட்டு வருகின்றனர். அதில் ஒருவரே காரைநகர் களபூமியை சேர்ந்த சபாரட்ணம் ஐயா.
இவரும் இவரது துணைவியாரும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பயன்படுத்தி பொருட்களை சேமித்து அடுத்த சந்ததிக்காக பாதுகாத்து வருகின்றனர். இவர்களின் அரும்பணியை பலரும் பாராட்டியுள்ளனர்.