யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 3 ஆசனங்கள், த.தே.ம.மு – 01, ஸ்ரீ.ல.சு.க – 01, ஈ.பி.டி.பி – 01, த.ம.தே.கூ - 01 

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இதுவரை எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 3 ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் ஆசனமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் தலா ஓர் ஆசனமும் கிடைக்கும் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 113,000 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 55,000 வாக்குகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 49,000 வாக்குகளையும், ஈ.பி.டி.பி. - 45,000 வாக்குகளையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன என முதற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன. 

தற்போது விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன என யாழ். மத்திய கல்லூரியில் இருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.