யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது கைத்தொழில் கண்காட்சி!

சனி செப்டம்பர் 14, 2019

வடக்கு மாகாண கைத்தொழில் கண்காட்சி இன்று யாழ் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது.

வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் நடத்தும் இக்கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை) நாளையும் இடம்பெறுகிறது.

111

வட மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்த தொழிற்துறைக் கண்காட்சியில் பல வகையான பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ள உற்பத்தியாளர்களில் சிறந்த உற்பத்தியாளர்களாக தெரிவு செய்யப்படுவர்களுக்கு தேசிய மட்டத்திலான சில்பா அபிமானி ஜனாதிபதி விருது வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

111

இன்றைய கண்காட்சியில் மாகாண ரீதியா வெற்றி பெற்ற உற்பத்தியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.