யாழ் முற்றவெளியில் பெரும் சத்தத்துடன் ஓங்கி ஒலித்த தமிழீழ எழுச்சிப்பாடல் 

புதன் சனவரி 22, 2020

வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்- யுவதிகள் இணைந்து தமிழினத்தின் கலை, கலாசார பாரம்பரியங்களைப் பேணும் வகையில் தைப்பொங்கல் விழாவையும், பண்பாட்டுப் பெருவிழாவையும் யாழ்.முற்றவெளி மைதானத்தில் பெருமெடுப்பில் கொண்டாடி இருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கபட்டிருந்த நிகழ்வில் 108 மண் பானைகள் வைக்கப்பட்டுப் பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டது.

அதன்போது “பொங்கலிடு தமிழா….பொங்கலிடு தமிழா….பொங்கிவரும் விடுதலைக்காய்ப் பொங்கலிடு தமிழா!” எனும் பாடல் திடீரெனப் பெரும் சத்தத்துடன் ஒலிபரப்பட்டது.

தமிழீழ எழுச்சிப்பாடல் ஒலித்தபோது அங்கு கூடி இருந்து பொங்கலிட்டவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வில் இளைஞர்- யுவதிகள், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.