யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019

முல்லைத்தீவு  மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின் கீழ் யுத்தத்தால் மற்றும் வறுமையால் மாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கும் திட்டம் இன்று காலை 10 மணியலவில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வானது மாங்குளம் பகுதியில் மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு எதிராக உள்ள கிராம சேவையாளர் வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மு/மாங்குளம் மகா வித்தியாலய அதிபர் திரு யோகானந்தராசா மங்கல விளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ச்சியாக கல்வி நிலைய பெயர்ப்பலகையினையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

பின்னர் வைபவ ரீதியாக கல்வி நிலையத்தை திறந்து வைக்கின்ற நிகழ்வினை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திவாகரனால் மேற்கொள்ளப்பட்டது

ஏறத்தாழ 200 பிள்ளைகள் இலவசக்கல்வி நிலைய ஆரம்பவிழாவுக்கு வருகை தந்ததுடன் அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன இன்றைய விழாவின்  விருந்தினராக கலந்து சிறப்பித்த அதீதிகளால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

111

வைபவ ரீதியாக இலவச கல்வி நிலைய திறப்பு விழா நிகழ்வுகள் நிறைவு பெற்றதும் தொடர்ச்சசாக ஒன்பது கிராமத்திலிருந்து வருகை தந்திருந்த மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கை அனுபவம் மிக்க ஆசிரியர்களுடன் இன்று மேற்கொள்ளப்பட்டது

இந் நிகழ்விற்கு வருகைதந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தலைவர் திவாகரன் மற்றும் கலைப்பீட ஒன்றியத்தலைவர் கிரிசாந் மற்றும் பல்லைக்கழக மாணவர்கள் மற்றும்  பாடசாலை அதிபர்கள் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக வருகைதந்த மாணவர்களுக்கு புலம் பெயர்நாடுகளில் வசிக்கும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பினால் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.