யாழ் திருநெல்வேலி வீடொன்றில் அதிகாலை தீ விபத்து!

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

யாழ்ப்பாணம் திருநெல்வேலி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

 இதன்போது வீட்டிலிருந்த 67 வயதுடைய குடும்பப் பெண் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றார்கள்.