யாழ் விபத்தில் முதியவர் படுகாயம்..!

சனி ஜூலை 11, 2020

யாழ்ப்பாணம் – பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.