யாழில் சர்வதேச விமான நிலையம் அமைத்து நாட்டை பிரித்துவிட்டார்களா?

ஞாயிறு அக்டோபர் 20, 2019

யாழில் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை பிரித்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கில் விமான நிலையம் ஒன்றை அமைக்கத் தொடங்கி விட்டார்.

இதன் மூலம் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்துவிட்டார்களோ என்ற தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக வந்தவர்கள், இனி பலாலி விமான நிலையம் வழியாக செல்வார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்