யாழில் பழுதடைந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு

புதன் அக்டோபர் 20, 2021

சண்டிலிப்பாய் சந்திப் பகுதியில் உள்ள காணியிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர் இன்று காலை 10.30 மணியளவில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போதே அவர் கைத் துப்பாக்கியினை கண்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து காணி உரிமையாளரால் காவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த மானிப்பாய் காவல் துறைக்கு அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதோடு அந்தக் கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.