யாழில் வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைப்பு!

வெள்ளி சனவரி 17, 2020

யாழில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.  யாழ். கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த வங்கி முகாமையாளரின் வீட்டுக்குள் நேற்று (16) இரவு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

தீ முழுமையாக பரவாததால் , கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.  குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்  துறைக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்  துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.