யாழ்.பல்கலையில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

ஞாயிறு ஜூலை 05, 2020

இராணுவக் கெடுபிடி, புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05.07.2020) ஞாயிற்றுக்கிழமை தமிழீழ கரும்புலிகள் நாள் உணர்வு பூர்வமாக நினைவுகொள்ளப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நினைவேந்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மற்றும் கொழும்பு ஊடகங்கள் கரும்புலிகள் நினைவேந்தல் பற்றிய நினைவூட்டலை செய்தியாக வெளியிடவே அச்சமடைந்த நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை மாணவர்களின் இந்த உணர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையே உணர்த்தி நிற்கிறது.