யாழ்ப்பாண அரசர்களின் பொக்கிசம் நல்லூர் மந்திரிமனையை அபகரிக்க சிங்களவர் ஒருவர் முயற்சி

புதன் ஓகஸ்ட் 14, 2019

யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்களின் அடையாளமாக, தமிழர்களின் வீரப் பண்பாட்டு முதுசமாக, சங்கிலி மன்னன் பயன்படுத்தியதாக வரலாற்றில் இடம்பிடித்துள்ள மந்திரிமனையை சிங்களவர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். 

தமிழர்களின் தொன்மைச் சின்னங்களை இல்லாதொழித்து, அவர்கள் தமிழீழத்தின் பூர்வீகக் குடிகள் அல்லர் என அறிவிப்பதற்காக சிங்கள தேசம் பெரும் பிரயத்தனம் செய்து வருகின்ற நிலையில், தமிழர்களின் மரபுரிமைச் சின்னமாகிய மந்திரிமனையை அபகரிப்பதற்கு சிங்களவர் ஒருவர் முயற்சி  எடுத்துள்ளார். இதற்காக இவர் காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தை நாடிள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

தமிழர்களின் மரபுரிமையை பாதுகாக்க பன்னாட்டுத் தமிழர்கள் குரல்கொடுக்கவேண்டும்...

மந்திரி மனை என்பது யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில் தமிழ் அரசர் காலத்தோடு சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். 

இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். 

தமிழர்களின் மரபுரிமையை பாதுகாக்க பன்னாட்டுத் தமிழர்கள் குரல்கொடுக்கவேண்டும்...

போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாகும். பிற்பட்ட காலத்தவர்கள் இந்த மந்திரிமனையை புனரமைப்புச் செய்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. 

சங்கிலி மன்னனின் அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும் மந்திரிமனைக்கு அண்மையிலேயே உள்ளன. 

யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது என்பதற்கு சாட்சியங்களாக இருந்த பல இடங்கள், கல்வெட்டுக்கள், யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்களின் எஞ்சிய தடயங்கள் என்பன சிங்களப் படைகளாலும் சிங்கள அரச பிரிதிநிதிகளாலும் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளன. 

தமிழர்களின் மரபுரிமையை பாதுகாக்க பன்னாட்டுத் தமிழர்கள் குரல்கொடுக்கவேண்டும்...

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக இருந்த சங்கிலி மன்னனின் அரண்மனை இடித்து அழிக்கப்பட்டுள்ளது. அது இடித்து அழிக்கப்பட்ட இடத்திலேயே தற்போது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு தமிழர்களின் வரலாற்று இடங்களை ஆக்கிரமித்து, அழித்து தமிழர்களின் பூர்வீகத்தை அழித்து வருகின்ற சிங்களவர்கள் அதன் தொடர்ச்சியாகவே தற்போது மந்திரிமனையையும் கபளீகரம் செய்ய முனைப்புக் காட்டியுள்ளனர். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகும்.