யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல்!!

புதன் செப்டம்பர் 15, 2021

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடரப்பட்டது.

26.09.1987 அன்று காலை 10.48 மணிக்கு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் தொடங்கிய சாத்வீக பயணத்தின் முதலாம் நாளான இன்றைய நாள்  வட தமிழீழம் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு நினைவேந்தல் செய்யப்பட்டது.