யானை தாக்கி படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் மரணம்

வெள்ளி ஜூலை 31, 2020

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானை தாக்கியநிலையில்இ படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சைபலனின்றி இன்று (31) இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்..

கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு - களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்ஷி என்ற 32 வயதுடைய பெண் விரிவுரையாளரே உயிரிழந்தார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது. 

இவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் இன்றிரவு உயிரிழந்தார் என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.