யேர்மன் தலைநகரின் நெடுஞ்சாலையில் தமிழின அழிப்பு பதாதைகள் !

செவ்வாய் மே 14, 2019

தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் மாநகரில்  பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு நேற்றைய தினம் கவனயீர்ப்பு பதாதைகள்  கட்டப்பட்டது.

”சிறிலங்காவின் இன அழிப்பு அரசியலை புறக்கணிப்பு செய்”, “தமிழின அழிப்பு நாள் மே 18”, “146 679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது ?”

, ”ஐநா உள்ளக அறிக்கையின் அடிப்படையில் 70 000 ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டுள்ளார்கள்”

போன்ற தகவல்கள் எழுதப்பட்ட  பதாகைகள் அதிவேக பாதையை மையமாக கொண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

u