யேர்மனியில் இடம்பெற்ற 15 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு

திங்கள் செப்டம்பர் 13, 2021

 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வானது யேர்மனி வூப்பெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

l

இந் நிகழ்வில் உறுதிப்படுத்தப்பட்ட மவீரர்களான வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன் லோரன்ஸ், வீரவேங்கை கவியரசி அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் ஆகியோருக்கான வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.