திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாக ஒலித்திருக்கும் நிலையில் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளை தங்களுக்குக் கேட்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள் தில்லான தோழர்கள்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை திமுக-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டத்தில் திருவெறும்பூர், மணப்பாறை தொகுதிகளை கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மாநிலக் குழுவுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
“அந்தத் தொகுதிகளை நமக்கு கேட்க வேண்டும்” - திருச்சி அமைச்சர்களுக்கு திகில் கொடுக்கும் தோழர்கள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space