அனர்த்தத்துக்கு பின்னர் வீடுகளை மீள நிர்மாணிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்
Ad Space
Ad Space
'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்' வேலைத்திட்டத்தின் கீழ், சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் பணிகள் அநுராதபுரம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் நாளை (09) ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த விழா நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்கள் அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ மற்றும் இராஜாங்கனையிலும், குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டிய மற்றும் ரிதீகமவிலும் ஆரம்பிக்கப்படும்.
சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
Ad Space
Ad Space