அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள், இன்று (பெப்ரவரி 27) முதல் அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவை தொழிற்சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'டிட்வா' (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து கடந்த 93 நாட்களாக அனர்த்த நிவாரண அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் இரவு பகலாகப் பணியாற்றியுள்ளனர்.