அனுமதிப்பத்திரமின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
Ad Space
Ad Space
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிங்சின்வத்தை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரத்தினக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space