கேகாலை - வரக்காப்பொல , மஹேன பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமின்றி 1,235 லீற்றர் டீசலை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை பிரிவுக்குட்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பபட்டார்.
கைது செய்யப்பட்டவர் தொலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், வரக்காப்பொல பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அனுமதிப்பத்திரமின்றி டீசலைச் சேமித்து வைத்திருந்த நபர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space