கொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாதன்வத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (29) இரவு அனுமதியின்றி அரசாங்க மதுபானங்களை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 625 லீட்டர் அளவுடைய 180 அரசாங்க பியர் போத்தல்கள், 180 மில்லி லீட்டர் அளவுடைய 13 விசேட மதுபான போத்தல்கள் மற்றும் 375 மில்லி லீட்டர் 8 விசேட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் சாதன்வத்த பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது.
அனுமதியின்றி அரசாங்க மதுபானங்களை விற்பனை செய்தவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space