அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Ad Space
Ad Space
முன்னாள் அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவை, பெப்ரவரி 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளது.
46 மில்லியன் ரூபாயை எவ்வாறு சம்பாதித்தார், என்பதை வெளியிடத் தவறியதற்காக அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஜனவரி 23 கைது செய்யப்பட்டதையடுத்து தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space