ஈரான் அரசு அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளாது என, மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கொமெய்னியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல நாடுகள் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இத்தகைய அழைப்புகளுக்கு பதிலளித்த முகமது மொக்பெர், அமெரிக்கர்களை நாங்கள் நம்பவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எந்த அடிப்படையும் இல்லை. எங்களுக்கு இந்த போரை நாங்கள் விரும்பும் வரையில் தொடர முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் உறுதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space