அமைச்சர் விஜித ஹேரத் - பிரேமன் மேயர் சந்திப்பு!
Ad Space
Ad Space
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட பிரேமன் நகர மண்டபத்தில், பிரேமன் மேயர் ஆண்ட்ரியாஸ் போவன்சுல்ட் (Dr. Andreas Bovenschulte) தனக்கு அளித்த அன்பான வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகன உற்பத்தி, வர்த்தகம் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் பிரேமன் நகரம், இலங்கையில் உருவாகி வரும் புதிய பொருளாதார வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து சுமூகமான முறையில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஜெர்மனியில் இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத்துறை சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space