நாட்டில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக, 7,000 மெற்றிக் தொன் எரிவாயுவை சுமந்த கப்பல் ஒன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப் எரிவாயு (LAUGFS Gas PLC) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயு கையிருப்பு நெதர்லாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற எரிசக்தி நிறுவனமான SHV Energy இலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களில் சந்தையில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாதவாறு போதுமான கையிருப்புகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக லாப்ஸ் எரிவாயு (LAUGFS Gas PLC) நிறுவனம் தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது லாப் எரிவாயு கப்பல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space