அயர்லாந்தின் மொனகன் (Monaghan) மாவட்டத்தில் இயங்கி வரும் 122 சமூகத் தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொனகன் சமூகத் தொழில் நிறுவனங்களின் வலையமைப்பின் (Monaghan Social Enterprise Network) செயலாளராக ஜெயால்ட் அன்ரனி ராசரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இக்குழுவின் செயலாளராகப் பணியாற்றும் பொறுப்பு இவர்க்கு வழங்கப்பட்டுள்ளது. மொனகன் மாவட்டத்திலுள்ள 122 சமூகத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக இவ்வலையமைப்பின் ஊடாக அர்ப்பணிப்புடன் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக ஜெயால்ட் அன்ரனி தெரிவித்துள்ளார்.